Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா?
2024 புத்தாண்டின் முதல் வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண மழை கொட்டப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 31 டிசம்பர் 2023 முதல் 06 ஜனவரி 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். குறிப்பாக உங்கள் தந்தையுடன் உங்களுக்கு தகராறு இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் உறவில் பெரிய முன்னேற்றம் இருக்கும். வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரியவர்களக்கு இந்த வாரம் பல விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இருப்பினும், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் தேவைக்கு அதிகமாக பணம் செலவழிக்கலாம். இந்த வகையான தவறு உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, நீங்கள் அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் உங்கள் தேவையற்ற பிடிவாதம் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, தன்னம்பிக்கையுடன் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், உங்கள் நடத்தையை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் திட்டங்களில் சில தடைகள் இருக்கலாம். இந்தக் காலக்கட்டத்தில், உங்களுக்கு நெருக்கமான அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெறாமல் எந்த முக்கியமான வேலையையும் செய்யாமல் இருந்தால் நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கலாம். வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணிற்கு உரியவர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் இந்த வாரத்தில் முடிவடையும். வேலை சம்பந்தமான பயணத்தை மேற்கொண்டால் தகுந்த பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலை உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காணலாம். உங்களுக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் புதிதாகவும் பெரியதாகவும் ஏதாவது செய்ய நினைத்தால், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தின் பார்வையில் இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வார இறுதியில், வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம், இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த ஏழு நாட்களும் ஆரோக்கியத்தின் பார்வையில் உங்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரம் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பணியிடத்தில், நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. விரும்பாத சூழலில் வேலை செய்ய வேண்டியிருக்கும். உடல்நிலை சரியில்லை என்றால், கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நிதிக் கண்ணோட்டத்தில், இந்த வாரம் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் சோம்பலை உணரலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கும். இப்படி அலட்சியமாக இருந்தால், உங்கள் எதிர்காலத் திட்டங்கள் தடைபடலாம். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது, எனவே பயனற்ற விஷயங்களில் அதை வீணாக்காதீர்கள். யாரையும் விரைவாக நம்பும் உங்கள் பழக்கம் இந்த வாரத்தில் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வார இறுதியில், குடும்பம் தொடர்பான சில பிரச்சினைகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணிற்கு உரியவர்களின் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வேலை சம்பந்தமாக இந்த வாரம் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளையும் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் புதிய திட்டத்தில் பணியைத் தொடங்கும் வாய்ப்பைப் பெறலாம். விரைவில் உங்கள் வணிகம் முன்னேற்றமடையும்.



Click it and Unblock the Notifications











