Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குருவின் ஆசியால் இந்த வாரம் இந்த 7 தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலை உயரப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 28 ஏப்ரல் 2024 முதல் 04 மே 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையின் வலிமையால் நீங்கள் நல்ல வெற்றியை அடைவீர்கள். நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். அதுவும் தேவையற்ற செலவுகளை அதிகம் செய்வீர்கள். இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். காதலைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் அதிக ஆற்றல் நிறைந்தும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். அனைத்து வேலைகளையும் உரிய நேரத்தில் முடிப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவருடன் உங்களுக்கு விரிசல் இருந்தால், இந்த வாரத்தில் அது சரியாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில் திடீரென்று பணம் கிடைக்கலாம். உடல்நிலையில் அலட்சியமாக இருக்காதீர்கள் இல்லையெனில் அது பெரிய செலவை வைத்துவிடும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் எதிர்மறையாக உணர்வார்கள். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. எல்லா கவலைகளையும் மறந்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தால் நல்ல பலனைப் பெறலாம். நிதி ரீதியாக, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் நிறைய பணம் செலவழிக்கப்படலாம். இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து பணம் வரும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் காணப்படும். வாகனத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதிர்மறை உணர்வை அதிகம் உணர்வார்கள். எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் தேவையற்ற விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் முன்னேற்ற கனவு நிறைவேறாமல் போகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். ஏதாவது புதியதாக செய்ய நினைத்தால், உங்கள் நிதி நிலைமையை மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் நன்றாக இருக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதில் சந்திக்கும் தடைகள் நீங்கும். நெருக்கமான ஒருவரிடமிருந்து நீங்கள் நிதி உதவி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உழைக்கும் மக்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் தொழில் வேகமாக முன்னேறும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வார இறுதியில் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் வீட்டு சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால், இந்த வாரம் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் செலவுகளுக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் கோபத்தை இழக்காதீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, பொறுப்புகளின் சுமை அதிகமாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்காக போதுமான நேரத்தை நீங்கள் பெற முடியாது. சண்டைகளைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சட்ட விஷயங்களில் சிக்கிக்கொள்ளலாம். காதலைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பணியிடத்தில் தங்களின் படைப்பாற்றல் மூலம் உயர் அதிகாரிகளை ஈர்ப்பார்கள். இதனால் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளின் நிதி நிலை வலுவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். வார இறுதியில் திடீரென்று நிதி ஆதாயத்தைப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











