Latest Updates
-
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க.. -
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்!
இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 26 நவம்பர் 2023 முதல் 02 டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கும். வணிகர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வார இறுதியில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிது தூரம் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் நன்றாக இருக்கும். முடிவுகளை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டால், இந்த வாரத்தில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நிதி நிலையில் ஒரு பெரிய உயர்வு ஏற்பட வலுவான வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். தொழிலதிபர்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவு இன்னும் வலுவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் பணியிடத்தில் முன்னேற்றதைக் காண்பார்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி விஷயங்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்தால், உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் உதவியால் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரத்தில் உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். கடின உழைப்பு வெற்றி பெறும். நீதிமன்ற விவகாரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது, இல்லையெனில் விளைவுகள் உங்களுக்கு எதிராக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தமும் அதிகரிக்கும். உங்கள் நடத்தையிலும் சில மாற்றங்கள் இருக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த எண்ணிற்கு உரியவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், ஒற்றுமையும் நிலவும். தொழிலதிபர்கள் முதலீடு விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் முன்னேற்றக் கனவு நிறைவேறாமல் போகும். பண விஷயத்தில் இந்த வாரம் செலவு அதிகமாக இருக்கும். காதல் விஷயத்தில் இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் குறையும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் வணிகர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையிலும் முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும்.
எண் 8
8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் புதிய காதலைப் பெறக்கூடும். பண விஷயத்தில் இந்த வாரம் நன்றாக இருக்கும். எந்த நிதி முடிவை எடுத்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறலாம். முக்கியமாக இந்த வாரத்தில் புதிய வருமானத்தைப் பெறுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணிற்கு உரியவர்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஒருவித குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். அவசரத்திலும் கோபத்திலும் எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவார்கள். சிலர் பதவி உயர்வைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இது தவிர, உங்கள் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.



Click it and Unblock the Notifications