Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவங்க பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும்..

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 21 January To 27 January 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 21 ஜனவரி 2024 முதல் 27 ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உங்கள் வாரம் கலவையாக இருக்கும்.தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். பணியிடத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேண நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், மேலும் உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் அழுத்தமாக இருக்கும். இந்த வாரத்தில், நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை இந்த வாரத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் படிப்பு தொடர்பான சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்களுக்கும் இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். கல்வி தொடர்பான எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், பெரிய முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறலாம். பொருளாதார நிலை வலுப்பெறும். இந்த வாரத்தில் நீங்கள் ஆற்றல் நிறைந்தவராகவும் மிகவும் நேர்மறையாகவும் இருப்பீர்கள்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக வேலைப்பளு காரணமாக உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்காது. குறிப்பாக வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உங்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் ஆலோசனையை நீங்கள் பெற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். வார இறுதியில் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல காலமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் லாபகரமாக இருக்கும். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அபரிமிதமான லாபம் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரை சந்திக்கலாம். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் திடீரென்று பணம் பெறலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை சம்பந்தமான பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம். வாரத்தின் நடுவில் எழும் சொத்து சம்பந்தமான தகராறு காரணமாக வீட்டில் சூழ்நிலை மோசமடையலாம். இந்த வாரம் மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. படிப்பில் உங்கள் கவனம் சிதறலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னேற்றம் குறையலாம். படிப்பில் எந்த விதத்திலும் அலட்சியம் காட்டாமல் இருந்தால் நல்லது. வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும், ஆனால் உங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். வியாபாரிகள் இந்த வாரம் புதிய ஒப்பந்தங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை கடினமாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வாரம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்களின் சில வேலைகள் பாதியில் நிற்கும் வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் இந்த வாரம் சர்ச்சைக்குரியதாக இருக்கும். உங்கள் துணையைப் பற்றி மனதில் சந்தேகம் ஏற்படும். யோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் நல்லது.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் அபரிமிதமான நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியையும் கொடுப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

Story first published: Sunday, January 21, 2024, 8:32 [IST]
Desktop Bottom Promotion