Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சூரியனின் ஆசியால் இந்த வாரம் இந்த 7 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 17 மார்ச் 2024 முதல் 23 மார்ச் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் பலத்தால், பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற செலவுகள் உங்கள் பட்ஜெட்டை கெடுத்துவிடும். இந்த வாரம் உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உறவில் புதுமையை உணர்வீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இருப்பினும், ஈகோ போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். குறிப்பாக பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சிந்தனையுடன் முன்னேறுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முரட்டுத்தனமான நடத்தை உங்களிடையே கசப்பை அதிகரிக்கும். இந்த வாரத்தில், உங்கள் திருமண வாழ்க்கையில் மந்தமான நிலை இருக்கும். உடல்நிலையில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிந்தால், உயர் அதிகாரிகளின் முழு உதவியையும் பெறலாம். இந்த வாரத்தில் நீங்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம், இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் புதிய ஆற்றலை உணர்வீர்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். வியாபாரிகளின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரலாம். திருமணமாகாதவராக இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் துணையை சந்திக்கலாம்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. சில பழைய நோய்களால் மிகவும் சிரமப்படுவீர்கள். இதன் காரணமாக உங்கள் திட்டங்களும் தடைபடலாம். இந்த வாரத்திவ் உங்கள் நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சரியான நடத்தையைப் பேணுங்கள். சிறிய விஷயங்களுக்கு கோபம் கொள்ளும் உங்கள் பழக்கம் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். வேலையைப் பொறுத்தவரை, அதிகம் கவலைப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். உங்களிடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தால் நல்லது. திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சில நாட்களாக நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த வாரத்தில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படலாம். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட உங்களின் அனைத்து வேலைகளும் முடிவடையும். உங்கள் வேலையில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள். அது வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வீட்டு விஷயங்களில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. பணியிடத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் அரசு வேலையில் பணிபுரிபவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். தனியார் வேலை செய்பவர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும், ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கூட்டு தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இந்த வாரம் உங்கள் திட்டம் முன்னேறும். நிதி நிலை வலுப்பெறும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். இதனால் உங்கள் பட்ஜெட் சமநிலையற்றதாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் நல்லது. அதிக வேலைப்பளு உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க முயற்சிப்பீர்கள். உங்கள் முழுமையடையாத சில வேலைகள் வாரத்தின் நடுப்பகுதியில் முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











