Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண மழை பொழிகப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 10 டிசம்பர் 2023 முதல்16 டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளின் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இந்த வாரத்தில், உங்கள் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் இந்த சிரமத்திலிருந்து நீங்கள் எளிதாக வெளியேற முடியும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வார இறுதியில் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவிர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய முடிவுகளில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு ரொமான்டிக்காக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் கோபம் பல பிரச்சனைகளில் சிக்க வைக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், இந்த வாரத்தில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். சரியான நிதி முடிவுகளால் நல்ல பலன்களைப் பெறலாம். அது வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்திற்கான வழிகள் உங்களுக்குத் திறக்கப்படும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். இந்த நேரத்தில், மத நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்,
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தகர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இந்த வாரத்தில் இனிமையாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன், இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத் தரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் உங்கள் வேலையைச் செய்வீர்கள். வார இறுதியில் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளையும் பெறுவீர்கள். இந்த வாரத்தில் உக்ள் எதிரிகளுடன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் அவர்களால் சிக்கலை சந்திக்கலாம்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உடல்நிலை குறித்து நீங்கள் கவலைப்பட்டால், இந்த வாரத்தில் அவரது உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் உங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சிலருக்கு உதவுவதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம். உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் உணவுப் பழக்கத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள், இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். இந்த வாரம் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் வார்த்தைகள் மற்றும் ஞானத்தின் அடிப்படையில் நீங்கள் பெரிய வெற்றியை அடைய முடியும். பண விஷத்தில் சிறப்பாக இருக்காது. நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பணத்தை கையாளும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மறக்கமுடியாததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வசதிகள் பெருகும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். வேலை அழுத்தம் அதிகரிப்பதால் நீங்கள் சில அழுத்தங்களை உணரலாம். உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் கொடுக்காமல் இருந்தால் நல்லது. வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் முக்கியமானது. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் வாரத்தின் மத்தியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பழைய கடனில் இருந்து விடுபடலாம். உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் விரைவில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். இருப்பினும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். வேலைப் பார்வையில் இந்த நேரம் உங்களுக்கு சராசரியாக இருக்கும். நீங்கள் முன்னேற்றத்தை விரும்பினால், நீங்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. .
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. ,ந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இநத் வாரம் நன்றாக இருக்கும். உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் மட்டுமே இருக்கும். மனைவியுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சில நல்ல செய்திகளையும் பெறலாம். வேலையில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். ஆனால் உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











