இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் பெரிய பணப் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 14 April 2024 To 21 April 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 14 ஏப்ரல் 2024 முதல் 21 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளி பிறந்தவர்களுக்கு பிஸியாக இருக்கும். வேலை தொடர்பான பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவசர அவசரமாக சில முடிவுகளை எடுப்பீர்கள், அது உங்களுக்கு பிரச்சனையாகிவிடும். இந்த நேரத்தில் சிறிய முடிவுகளை கூட சிந்தித்து எடுத்தால் நல்லது. வேலை செய்பவர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் தொழிலதிபர்களும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஏமாற்றம் அடையலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொண்டால், உங்கள் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகளின் பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் லாபம் ஈட்ட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கையில் மந்தமான நிலை ஏற்படும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பாதகமான சூழ்நிலைகளில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உங்களுக்கு சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். உங்கள் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் ஆரோக்கியம் குறித்து மிகவும் கவனமாக இருப்பீர்கள். கல்வி மற்றும் வங்கித் துறையில் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், உங்கள் கூட்டாளரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்த வாரத்தில் உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சராசரியாக இருக்கும்.. நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனதில் நடக்கும் குழப்பத்தை புறக்கணித்து உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமாகவே இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில புதிய யுக்திகளை வகுக்க வேண்டும். உங்களுக்கு அதிக பணிச்சுமை இருந்தால், சரியான திட்டமிடலின் படி உங்கள் வேலையை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை எதுவாக இருந்தாலும், உங்கள் உறவில் அன்பையும் பாசத்தையும் பராமரிக்க உங்கள் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். ஏதேனும் தேர்வு எழுதி இருந்தால் நல்ல மதிப்பெண்களையும் பெறலாம். இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முழு வாய்ப்பு கிடைக்கும். இநத வாரம் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவில் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உறவைப் பாதுகாக்க முயற்சி செய்தால் நல்லது. மாணவர்கள் கல்வித் துறையில் ஏதாவது சிறப்பாகச் செய்ய விரும்பினால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் தன்னம்பிக்கை சற்று பலவீனமாக இருக்கும் மற்றும் உங்கள் கவனக்குறைவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில தோல் அல்லது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த மாணவர்கள் படிப்பில் அதிக மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். உங்கள் மனதை அமைதியாக வைத்து, நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு இடையே கசப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் செயல்திறன் மேம்படும். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், உங்களின் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் போட்டியாளர்கள் உங்களை வீழ்த்தக்கூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடதில் மிகுந்த மரியாதையைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாட்டில் திருப்தி அடைந்து, பதவி உயர்வை வழங்கலாம். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கும் நல்ல நிதிப் பலன்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் நீங்கள் உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்க முடியும். ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் உங்கள் உறவுகளை கையாள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள், அதன் விளைவு உங்கள் ஆரோக்கியத்திலும் தெரியும்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்குள் ஈகோ உணர்வு இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம். துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். இந்த காலகட்டத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் சிறிய வேலைகளை கூட மிகவும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் வேலை ஆபத்தில் இருக்கக்கூடும். தொழிலதிபர்கள் எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சிறிய உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

Story first published: Sunday, April 14, 2024, 8:00 [IST]
Desktop Bottom Promotion