Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலை உயரப் போகுது...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 12 May 2024 To 18 May 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது12 மே 2024 முதல் 18 மே 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையும் மேம்படும். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவு திறக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள், அதன் தாக்கம் உங்கள் ஆரோக்கியத்திலும் தெரியும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களின் அனைத்து பணிகளும் சுமுகமாக முடிவடையும். இந்த வாரத்தில், உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாட்டில் திருப்தி அடைவார்கள். இதனால் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். வணிகர்களும் விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் தொழில் வேகமாக முன்னேறும். இந்த வாரம் நீங்கள் வியாபாரம் தொடர்பாக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் உடல்நிலை மிகவும் நன்றாக இருக்கும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்கள் காதலில் விழலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வார இறுதியில் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலை வலுவடையும். இந்த வாரம் உற்சாகத்துடன் இருப்பீர்கள். மேலும் நல்ல ஆரோக்கியத்தையும் அனுபவிப்பீர்கள்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உறவு தொடர்பான எந்த முக்கியமான முடிவையும் எடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் வேறு முகத்தைப் பார்ப்பீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் உள்ளது. வியாபாரிகள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம். முக்கியமாக தோல் பிரச்சனையால் அவதிப்படலாம்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவீர்கள். நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம். இது தவிர வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகளும் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தில் எந்த வியாபார முடிவை எடுத்தாலும் நல்ல பலனைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. சில காலமாக உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவார்கள். உயர்கல்வி கற்க வெளிநாடு செல்ல நினைத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த வாரம் வேலையில் இருப்பவர்கள் பிஸியாக இருப்பார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தடைப்பட்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மீண்டும் தொடங்கலாம். கூட்டு வணிகம் செய்வதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் வீட்டு பிரச்சனை காரணமாக வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு மோசமடையும். இந்த வாரம் சிறு விஷயங்களுக்கும் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமாகவே இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரிகள் பண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். இந்த காலகட்டத்தில், நிதி இழப்புக்கான அறிகுறிகள் உள்ளன. வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால், நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உடல்நலம் பலவீனமாக இருக்கும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நீங்கள் வெற்றியை அடைய முடியும். உங்கள் கல்வியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், உங்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சற்று ஏமாற்றமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனதில் பல எதிர்மறையான எண்ணங்கள் வரலாம். இருப்பினும், தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த வாரத்தில் பேசி உங்கள் உறவை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பும் உள்ளது. வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம்.

Story first published: Sunday, May 12, 2024, 9:00 [IST]
Desktop Bottom Promotion