Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த வாரம் எண் கணிதத்தின் அடிப்படையில் நீங்க பிறந்த தேதிக்கு எப்படி இருக்க போகிறது தெரியுமா?
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் உந்துதல் எண், சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது இந்த வாரத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1 (பிறந்த தேதி 1,10,19,28)
ஒன்றாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறலாம். தொழிலதிபர்களுக்கு பெரிய நிதி நன்மை கிடைக்கும். நீங்கள் புதிதாக செய்த முதலீடு, உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். நீங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை பெறலாம்.
எண் 2 (பிறந்த தேதி 2,11,20,29)
இரண்டாம் எண்ணை கொண்டவர்களுக்கு, வேலையில் அடிப்படையில் இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்த நேரத்தில் பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கலாம். இருப்பினும், கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், இந்த வாரம் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
எண் 3 (பிறந்த தேதி 3,12,21,30)
மூன்றாம் எண்ணை கொண்டவர்களில், குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீட்டின் இரட்டிப்பு பலனைப் பெறலாம். இந்த நேரத்தில் சில பெரிய பிரச்சனைகளைத் தீர்க்கும் வாய்ப்புள்ளது. முன்னோர் சொத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரக்கூடும்ள. உங்கள் தந்தையுடனான உறவு இன்னும் வலுப்பெறும். காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடனான அன்பு இன்னும் அதிகரிக்கும்.
எண் 4 (பிறந்த தேதி 4,13,22,31)
நான்காம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் குடும்பத்துடன் மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்த பயணம் மறக்க முடியாததாக அமையும். இந்த நேரத்தில், உங்கள் மனநிலை நன்றாக இருக்கும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். புதிய வருமானத்தைப் பெறலாம். இருப்பினும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வார இறுதி உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எண் 5 (பிறந்த தேதி 5,14,23)
ஐந்தாம் எண்ணை கொண்டவர்களே, அலுவலகத்தில் உங்கள் நிலை வலுப்பெறும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்கள் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் துணையைத் தேவையில்லாமல் சந்தேகிக்கும் பழக்கத்தால், உங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கலாம். இதனால் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றலாம். அத்தகைய சூழலில், உங்கள் மனதை நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
எண் 6 (பிறந்த தேதி 6,15,24)
ஆறாம் எண்ணை கொண்டவர்களுக்கு, வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் தொழில் ஒரு புதிய திசையில் நகரும். அத்துடன் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல பலம் இருக்கும். புதிய சொத்துக்களை வாங்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் உறவில் வித்தியாசமாக சந்தோஷத்தை உணர்வீர்கள்.
எண் 7 (பிறந்த தேதி 7,16,25)
ஏழாம் எண்ணை கொண்டவர்கள் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். புதிய முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் முடிவை கவனமாக எடுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் அவசரம் மற்றும் பீதியைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் முக்கியமான சில வேலைகள் பாதியில் நிற்பதால், பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். வார இறுதியில், உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
எண் 8 (பிறந்த தேதி 8,17,26)
எட்டாம் எண்ணை கொண்டவர்கள், இந்த வாரம் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். அலுவலகத்தில் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக உயர் அதிகாரிகளிடம் பேசும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்தவும். வாரத்தின் நடுப்பகுதியில் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்களின் இந்த பயணம் வேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்.
எண் 9 (பிறந்த தேதி 9,18,27)
ஒன்பதாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த காலக்கட்டத்தில் காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். உங்கள் துணை உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள். பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் மனதை அறிய முயற்சிப்பது நல்லது. அலுவலகத்தில் புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் முன்னேற இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களால் முடிந்ததைச் செய்ய உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில், உங்கள் உடல்நலம் குறித்த அக்கறை அதிகரிக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications











