இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்வில் உள்ள பெரிய பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 11 February To 17 February 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 11 பிப்ரவரி 2024 முதல் 17 பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் பிஸியாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மிகுந்த உடல் சோர்வை அனுபவிப்பீர்கள். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளும் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் நல்லது. உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் தந்தையுடனான உறவில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால், அப்பிரச்சனை இந்த வாரத்தில் முடிவுக்கு வரும். இருப்பினும், நிதி விஷயங்களில் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் ஒரு நல்ல வேலை தேடி வரும். சொந்தமாக தொழிலைத் தொடங்க நினைத்தால், அதில் உள்ள தடைகள் இந்த வாரத்தில் நீங்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் குறுகிய தூரம் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் அதிகமாக செலவழிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் தங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் குறையும். உங்கள் உறவுகளை வலுப்படுத்த முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகளும் நல்ல பலனைத் தரும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிந்திருந்தால், உங்கள் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். இருப்பினும், அதன் மூலம் நல்ல பலன்களைப் பெற வாய்ப்பு உள்ளது.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் தங்கள் குழந்தைகளின் கல்விப் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடுவார்கள். நிதி நிலையை மேம்படுத்த இந்த காலகட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். செலவுகளைக் குறைத்தால் நல்ல பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். இந்த வாரத்தில் உங்கள் துணைக்கு போதுமான நேரத்தை வழங்குவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் ஏதேனும் தேர்வு எழுதி இருந்தால் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் கவனக்குறைவால் பணியிடத்தில் கெட்ட பெயரைப் பெறலாம். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த முயற்சி செய்தால் நல்லது. வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். உங்கள் முக்கிய வணிக முடிவுகளை நீங்கள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் உங்களை மனரீதியாக தொந்தரவு செய்யலாம். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்மறை உணர்வையும் உணருவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் தெரியாதவர்களிடம் சற்று விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் உங்கள் நல்ல செயல்திறனுக்காக நீங்கள் பெரும் மரியாதையைப் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்களை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வைத்திருக்க உங்கள் தினசரி வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்திருந்தால், இந்தக் வாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் சில முக்கியமான வேலைகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். கவனக்குறைவால் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். வார இறுதியில் சில நல்ல செய்திகள் வந்து உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்லலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்பவரின் சம்பளம் அதிகரிக்கும். வியாபாரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்த வியாபாரிகளுக்கு இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இதனால் நல்ல வெற்றியைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மோதலைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. வார இறுதியில் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, February 11, 2024, 9:00 [IST]
Desktop Bottom Promotion