Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
சூரிய பகவானின் ஆசியால் இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 10 மார்ச் 2024 முதல் 16 மார்ச் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். வாரத்தின் தொடக்கத்தில் பணப் பற்றாக்குறையால் பல பணிகள் முழுமையடையாமல் போகும். வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள் மற்றும் எதிர்மறை உணர்வை உணர்வீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நடத்தையில் கோபமும் எரிச்சலும் காணப்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். தேவையற்ற கவலைகளை விட்டு விலகி, நேர்மறையாக இருக்க முயற்சிப்பது நல்லது.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். புதிய வருமானத்தைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் பழைய கடனை அடைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும் மற்றும் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்கள் திட்டங்கள் முன்னேறும். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கலாம், ஆனால் உங்கள் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பும் உள்ளது. வியாபாரத்தை முன்னேற்ற விரும்பினால், அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. நன்றாக யோசித்த பிறகே உங்கள் முடிவை எடுங்கள். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் நன்றாக இருக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டால் அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகளில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், அவர்களின் உதவியால் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும். தொழிலதிபர்கள் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறலாம். தடைபட்ட உங்களின் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் உங்கள் வாழ்க்கை துணையுடன் மறக்கமுடியாத நேரத்தை செலவிடுவீர்கள்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்த வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள அரசு வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். சிறிய விஷயங்களுக்கு கோபப்படும் உங்கள் பழக்கம் இந்த வாரத்தில் உங்கள் வீட்டின் சூழலையும் கெடுத்துவிடும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும், நீங்கள் சில பெரிய மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். விரைவில் உங்கள் வணிகத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீங்கள் திருமணமாகாதவராகவும், நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களாகவும் இருந்தால், உங்கள் தேடல் இந்த வாரத்தில் முடிவடையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் தேவையற்ற கவலைகளால் சூழ்ந்திருப்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். தேவையற்ற விஷயங்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் உங்கள் இலக்கில் கவனம் செலுத்தினால் நல்லது. வேலையில்லாமல் இருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் அவசரமாக சில தவறான முடிவுகளை எடுப்பீர்கள். எனவே எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அவசரப்படாமல் கவனமாக சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் புதிய திட்டத்தில் பணியைத் தொடங்கினால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம், ஆனால் உங்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் விருப்பமும் நிறைவேறும். நிதி விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த வாரத்தில் நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால் இந்த வாரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications