Latest Updates
-
பீர்க்கங்காயை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க.. -
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
அடுத்த 7 நாட்கள் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலை உயரப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 08 அக்டோபர் 2023 முதல் 14 அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அடுத்த 7 நாட்கள் ரொமான்டிக்காக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். வார இறுதியில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் சற்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். திருமணமானவர்கள வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உறவு மோசமடையும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த வாரத்தில் இந்த தேதிகளின் பிறந்தவர்கள் தங்கள் இலக்கில் முழு கவனத்தை செலுத்துவார்கள். வேலையில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம். இருப்பினும் அதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் பட்ஜெட் பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பாசம் குறையும். தொழில் ரீதியாக, நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே ஈர்ப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உறவு வலுபெறும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அடுத்த 7 நாட்கள் தேவையற்ற விஷயங்களில்வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மன அமைதி பாதிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் ஏற்றதாழ்வுகள் நிறைந்ததாக இருக்கு. சிலர் வேலையை மாற்ற நினைக்கலாம்.முக்கியாக இக்காலத்தில் எந்த வகையான எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுகக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். தேர்வில் சிறப்பான வெற்றியை பெறலாம். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேகிளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் பிரச்சனைகளை தீர்க்க அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு பலன் தரும், நீங்கள் முன்னேறலாம். வார இறுதியில் பணத்தைப் பெறக்கூடும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகள பிறந்தவர்களின் எணிக்கை 9. இந்த வாரத்தில கோபம் மற்றும் ஈகோவை தவிர்க்க வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முக்கியமான பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது. வர்த்தகர்கள் அபாயகரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications