இந்த வாரத்துல இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகுது...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 07 January To 13 January 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 07 ஜனவரி 2024 முதல் 13 ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். தெரியாத பயம் உங்களை ஆட்டிப்படைக்கும். இது தவிர, மனதில் பாதுகாப்பின்மை உணர்வும் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். அதேசமயம் வேலையில் இருப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். இருப்பினும், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிஸியாகவும் சோர்வாகவும் இருக்கும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க, நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் துணையை தேவையில்லாமல் சந்தேகிக்காதீர்கள். வியாபாரிகள் இந்த வாரம் எதிரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காததால் உங்கள் தன்னம்பிக்கை குறையலாம்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் உறவுகளை மேம்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். குறிப்பாக உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவை வலுப்படுத்த நீங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இருப்பினும், இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் அவசரப்படாமல் இருந்தால் நல்லது. மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருப்பீர்கள்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் கௌரவம் இந்த வாரத்தில் அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதில் வெற்றி பெறுவீர்கள். வணிகத்துடன் தொடர்புடைய நபர்களின் நிலை வலுவடையும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தை புறக்கணித்தால் மருத்துவ செலவை அதிகம் சந்திக்க நேரிடும். எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை காண்பார்கள். கடின உழைப்பின் அடிப்படையில் நீங்கள் நல்ல வெற்றியை அடைய முடியும். பணிபுரிபவர்களின் சம்பளம் உயரும். தொழிலதிபர்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் இனிமையாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும். உழைக்கும் மக்களின் வருமானம் கூடும், வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரத்தில் உங்கள் முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள், இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். வார இறுதியில் உங்கள் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் கவனம் வேலையில் இருந்து திசைதிருப்பப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறிய தவறுகளை செய்யலாம். அப்படி அலட்சியமாகச் செயல்பட்டால் அதன் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு இது கடினமான காலமாக இருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்களிலும் பல தடைகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். சிறு சண்டைகள் பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். அப்போது உங்கள் மன அமைதி பாதிக்கப்படலாம். அவசரத்திலும் கோபத்திலும் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில், பல தவறான எண்ணங்கள் உங்கள் மனதில் வரலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பை நீங்கள் தொடருங்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். கவனக்குறைவால் உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் செயல்திறன் இந்த வாரம் நன்றாக இருக்கும். தொழிலில் உச்சத்தை எட்டும் உங்கள் கனவு விரைவில் நிறைவேறும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் அதிக லாபத்தை ஈட்டலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை எந்தளவுக்கு நினைக்கிறார்கள் என்பதை இந்த வாரத்தில் உணர்வீர்கள்.

Story first published: Sunday, January 7, 2024, 7:40 [IST]
Desktop Bottom Promotion