இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும்.. ரெடியா இருங்க..

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 07 April 2024 To 13 April 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 07 ஏப்ரல் 2024 முதல் 13 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளி பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். இந்த வாரத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, இந்த வாரத்தில் ஏதேனும் முக்கியமான வணிக முடிவை எடுத்தால், நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும். இருப்பினும், ஆடம்பரமாக செலவு செய்வது உங்களுக்கு நல்லதல்ல. திருமண வாழ்வில் காதல் நிலைத்திருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் நன்றாக இருக்கும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் குறுகிய தூர பயணங்களையும் மேற்கொள்ளலாம். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நிதி முயற்சிகள் வெற்றியடையும். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் வெற்றி பெறலாம். வேலை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தில் எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் நிதி நெருக்கடியைத் தவிர்க்க தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், உங்கள் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்களுடைய நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும், மேலும் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். இந்த வாரத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சற்று குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் சில புதிய சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், எந்த சூழ்நிலையிலும், நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். காதல் வாழ்க்கையில் மந்தமான நிலை ஏற்படும். உங்களிடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். நிதி சிக்கல்கள் காரணமாக, இந்த வாரத்தில் உங்கள் மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் எழக்கூடும்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக பெரியவர்களை கலந்தாலோசிக்க வேண்டும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். வேலையில் அலட்சியமாக இருக்காமல், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சித்தால் நல்லது. வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய திட்டத்தில் பணியைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனைவியுடனான உறவில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை இந்த வாரத்தில் சந்திக்கலாம். நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் சிறிய முடிவுகளைக் கூட மிகவும் சிந்தனையுடன் எடுப்பீர்கள். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் விதியை மாற்றும். மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் குடும்ப வாழ்க்கை டென்சன் நிறைந்ததாக இருக்கும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன், கண்டிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசிக்கவும், இல்லையெனில் அது எதிர்காலத்தில் முரண்பாடுகளுக்கு காரணமாகிவிடும். வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த வாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு வேலையை முடிக்க முயற்சித்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும் பட்ஜெட்டை விட அதிகமாக செலவிட வேண்டாம்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வார இறுதியில் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.

Story first published: Sunday, April 7, 2024, 9:20 [IST]
Desktop Bottom Promotion