Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 04 பிப்ரவரி 2024 முதல் 10 பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். ஒரு புதிய வேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், அதில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம். காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சற்று அழுத்தமாக இருக்கும். உங்கள் துணையுடன் சண்டை வரலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமற்றதாக இருக்கும். படிப்பில் உங்கள் ஆர்வம் குறையலாம்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த எண்ணிற்கு உரியவர்களின் நிலை பணியிடத்தில் வலுவாகும். இந்த வாரத்தில் செயல்திறனில் பெரிய முன்னேற்றத்தைக் காணக்கூடும். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் போட்டியாளர்களுக்கு நீங்கள் கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த எண்ணிற்கு உரியவர்களின் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும், ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும் என்பதால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கும் இந்த வாரம் நன்றாக இருக்கும். கூட்டு சேர்ந்து சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். நிதி நிலையில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் இந்த வாரத்தில் அலுவலகத்தில் அதிக பணிச்சுமை காரணமாக, மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எல்லா வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த வாரம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நீங்கள் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். பணப்பற்றாக்குறை காரணமாக வார இறுதியில் உங்களின் சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சிக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் கூடும். கால், முதுகு அல்லது தலைவலியால் அவதிப்படலாம்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் ஆன்லைன் வணிகம் செய்தால், நீங்கள் பெரிய நன்மைகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை இருக்கும். உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில், நீங்கள் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். தேவையற்ற சண்டைகளால் உங்கள் மன அமைதி பாதிக்கப்படலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் நடத்தைக்காக நீங்கள் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதலை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த எண்ணிற்கு உரியவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் சரியாகும். உங்கள் அன்புக்குரியவருடன் குறுகிய தூரம் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, பெரிய லாபத்தைப் பெற கடினமாக உழைத்தால், இந்த வாரம் நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம், ஆனால் உங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசர அவசரமாக முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், நீங்கள் உங்கள் முடிவை கவனமாக எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் மன அழுத்தம் காரணமாக இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையலாம்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த எண்ணிற்கு உரியவர்கள் அரசு வேலைக்குத் தயாராகி இருந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், இந்த வாரத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடன் உறவு ஆழமாகும். உங்களுக்கிடையில் அன்பும் காதலும் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரத்தில் முழு நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications