அடுத்த 7 நாட்கள் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 01 October To 07 October 2023 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 01 அக்டோபர் 2023 முதல் 07 அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அடுத்த ஒரு வார காலம் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நல்ல நிதி நன்மைகளைப் பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அவசரமாக எதையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரத்தில் சில நிதி நன்மைகளைப் பெறலம். ஆனால் அவசரமாக எந்த ஆவணத்திலும் கையெழுத்திடாமல் இருப்பது நல்லது. வாரத்தின் நடுப்பகுதியில் குடும்பத்துடன் கிழக்கு நோக்கி பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

எண் 3

3,12,2 1,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் சில நடவடிக்கைகள் எரிச்சலூட்டும். பணியிடத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறனும், திறமையும் உணர் அதிகாரிகளைக் கவரும். வார இறுதியில் நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். இந்த வாரத்தில் குறுகிய தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, அதன் மூலம் நல்ல பலன்களையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையானது இந்த வாரத்தில் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்த செல்லவும் முடிவெடுக்கலாம். சிக்கிய பணத்தை சிலர் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. வார இறுதியில் சில பெரிய செலவுகளை சந்திக்கலாம்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். தேவையற்ற கவலைகளால் சூழப்படுவீர்கள். அதிக வேலை அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணப் பிரச்சனையைக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் கோபம் மற்றும் ஈகோவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்களின் தற்போதைய வேலையை இழக்க நேரிடும். இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். தேர்வில் சிறப்பான வெற்றியை பெறலாம். ஆனால் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றி காண சோர்வையும், சோம்பலையும் தவிர்க்க வேண்டும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் குழந்தைகள் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரத்தில் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் நீண்ட தூர பயணத்தை செய்ய வேண்டியிருக்கும். வார இறுதியில் சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை இந்த வாரத்தில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை நன்றாக செலவிடுவீர்கள். நிதி நெருக்கடியைத் தவிர்க்க நினைத்தால், செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். மேலும் இந்த வாரத்தில் கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, October 1, 2023, 7:30 [IST]
Desktop Bottom Promotion