Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கப் போகுது!
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 04 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! கடந்த வாரத்தை விட இந்த வாரம் மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களின் பல முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். உங்களின் பண பிரச்சனைகள் இந்த வாரத்தில் சரியாகலாம். மனதில் உள்ள பெரிய கவலைகள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் சில பெரிய மற்றும் நல்ல மாற்றங்கள் காணப்படும். உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். வீட்டு சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்களின் டென்சன் நீங்கும். வீட்டில் சுபகாரியங்களை ஏற்பாடு செய்யலாம். வார இறுதியில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்காது. திடீரென்று செலவுகள் அதிகரிப்பதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண பிரச்சனையால் பல வேலைகள் நடைபெறாமல் போகலாம். வீட்டில் சண்டைகள் அதிகரித்து, மன கவலைகள் அதிகரிக்கும். எந்த வேலைகளையும் சரியாக செய்ய முடியாமல் போகும். வார இறுதியில் உங்களின் வேலைப்பளு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சற்று மந்தமாகவே இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் பல வேலைகளில் தடைகளை சந்திக்கலாம். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் மந்தமாக இருப்பீர்கள். பண விஷயத்தில் இந்த வாரம் நிறைய தேவையில்லாத செலவுகளை சந்திக்க நேரிடும். உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். உங்களின் வேலைகளில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கடின உழைப்பு மோசமாகிவிடும். இந்த வாரத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். இப்படி உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications