Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
அடுத்த 7 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் 2024 மே 04 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையான முடிவுகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இதனால் மனம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவதை மிகவும் அற்புதமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதனால் உங்களின் மனக்கவலைகள் நீங்கும். தொழிலதிபராக இருந்தால், நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். உறவுகள் விஷயத்தில் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் அவசரமாக செய்யக்கூடாது. அதேப் போல் முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், உங்கள் வழக்கத்தை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மொத்தத்தில், இந்த வாரம் உங்கள் வேலையுடன், ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பிஸியாக இருக்கும். இந்த வாரத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு வேலைகளை செய்தால், ஓரளவு டென்சனைக் குறைக்கலாம். இந்த வாரத்தில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் செலவுகள் இந்த வாரத்தில் அதிகரிப்பதால், பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால், இந்த வாரத்தில் உங்களின் கவனக்குறைவு உங்களின் கடனை அதிகரிக்கும். எனவே கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications