Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு படுமோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 மே 26 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 01 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நிம்மதியான வாரமாக இருக்கும். நிதி நிலை வலுவடையும். கடனை அடைப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த பரபரப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் முடிவடையும். தொழிலதிபர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு காதல் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களின் பணி வேகமாக முன்னேறும். உங்கள் வணிக முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். பணிபுரிபவர்களின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. அலுவலத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களின் கனவு நிறைவேறும். பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதலைப் பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்கள் மனதில் காதல் மலரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களின் சிரமங்கள் அதிகரிக்கும். நீங்கள் பல சிறு தவறுகளை செய்யலாம். இதனால் உயர் அதிகாரிகள் உங்கள் மீது அதிருப்தி அடைவார்கள். இந்த வாரத்தில் வணிகர்கள் எந்த ஒரு குறுக்கு வழியையும் பின்பற்றுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள். நிதி ரீதியாக நிறைய செலவுகளை சந்திப்பீர்கள். இதனால் உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக உங்கள் ஆரோக்கியமும் மோசமடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் வேலையும் பாதிக்கப்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். எப்பேற்பட்ட சிக்கலான சூழ்நிலையிலும் நேர்மறையாக இருக்க முயற்சிக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பயணம் உங்கள் நேரத்தையும், பணத்தையும் தான் வீணடிக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் கவனக்குறைவால் முக்கியமான வேலைகளை முடிக்க முடியாமல் போகும். இது உங்களின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். கூட்டு வணிகம் செய்பவர்கள் மோதல்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் சுமாராக இருக்கும். ஆடம்பரமாக செலவழிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கிய பிரச்சனைகளைப் புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய மருத்துவ செலவை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications