இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 2024 மார்ச் 02 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 25 February - 02 March 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் நம்பிக்கையுடனும் நேர்மையாகவும் இருப்பீர்கள். உங்களின் உறவுகள் மேம்படும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இந்த வாரத்தில் விடுபடுவீர்கள். முக்கியமாக இந்த வாரத்தில் சில நல்ல செய்திகளை பெறக்கூடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை சற்று பிஸியாக இருக்கும். இருப்பினும், கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த கடினமாக உழைத்து வந்தால், இந்த வாரத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் காதல் அதிகரிக்கும். இந்த வாரத்தில் உங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையானதாக இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் இந்த வாரத்தில் தேடி வரும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். மதிப்புமிக்க பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் மிகவும் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பீர்கள்.

இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். உங்களின் நடத்தையில் சில மாற்றங்கள் காணப்படும். இதனால் நீங்கள் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்களின் கோபத்தையும், ஈகோவையும் கைவிட வேண்டும். கடன் வாங்கியிருந்தால், இந்த வாரத்தில் அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். கடனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நிறைய மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். இந்த வாரம் மிகவும் சவாலானதாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தை விட நிறைய செலவுகளை சந்திப்பீர்கள். இந்த வாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமத்தை சந்திப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். முக்கியமான வேலைகளில் தடைகளை சந்திப்பீர்கள். இந்த வாரத்தில் உங்களின் தன்னம்பிக்கை குறையும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த வாரம் மோசமாக இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். அதிகமாகச் சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டு உங்கள் இலக்கில் கவனம் செலுத்தினால் நல்லது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அப்போது மிகுந்த சோர்வை உணரக்கூடும். இந்த வாரத்தில் உடலுக்கு சற்று ஓய்வு கொடுக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆரோக்கியம் மோசமடைந்துவிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, February 26, 2024, 9:49 [IST]
Desktop Bottom Promotion