Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
அடுத்த 7 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Weekly Lucky And Unlucky Zodiac Signs: கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இணக்கம் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர் இந்த வாரத்தில் உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நிதி நிலையில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இந்த வாரத்தில் பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை காதல் நிறைந்து இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சில முக்கியமான முடிவுகளையும் இந்த வாரத்தில் எடுப்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலனை இந்த வாரத்தில் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு இனிமையானதாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த வாரத்தில் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இந்த வாரம் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட்டால், நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், அதை நன்கு சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பண விஷயத்தில் அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். இதனால் உடல் ஆரோக்கியமும் சற்று பாதிக்கப்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் சற்று அதிகரிக்கும். இதனால் உங்கள் மன அமைதியும் பாதிக்கப்படும். இந்த வாரத்தில் சிறு முடிவுகளை எடுக்கவும் அதிகம் சிரமப்படுவீர்கள். உங்களின் நேரத்தை தேவையில்லாத விஷயங்களில் செலவிடுவீர்கள். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால், பெரிய பண இழப்பை சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள். ஆனால் தன்னம்பிக்கையை மட்டும் எப்போதும் விடாதீர்கள். வியாபாரிகள் மூன்றாம் நபரின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் பண பிரச்சனைகளை சற்று சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications