Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு கடினமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதனால் உங்கள் வேலைகளையும் சிறப்பாக செய்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை கவனம் செலுத்த முடியாமல் இருந்தால், இந்த வாரத்தில் அதற்கான நேரம் கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளியூர் சென்று வேலை செய்ய விரும்பி, இதுவரை அதில் தடைகளை சந்தித்து வந்திருந்தால், இந்த வாரத்தில் தடைகளின்றி நல்ல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்களின் தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று கடினமாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களுக்காக நேரத்தை செலவிட முடியாமல் போகும். வாரத்தின் நடுப்பகுதியில் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. இப்படி ஆரோக்கியம் மோசமடைவதால் உங்களால் வேலைகளை சரியாக செய்ய முடியாமல் போகும். சிலர் மிகுந்த எரிச்சலை அடையலாம். நிதி பிரச்சனையைத் தவிர்க்க வேண்டுமானால், சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் அவசரமாக எந்த ஒரு முடிவை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சிலர் மிகுந்த சோர்வையும், சுமையையும் உணர்வார்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால், உங்களின் பிரச்சனைகளும் அதிகரிக்கும். திட்டமிட்டு உங்கள் வேலைகளை செய்தால், பிரச்சனைகளைத் தடுக்கலாம். நிதி நிலை சற்று மோசமாக இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் வேலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக உங்கள் செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். நிதி நிலை சுமாராக இருக்கும். பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் மோசமான பழக்கவழக்கத்தால் ஆரோக்கியம் மோசமடையும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications