Latest Updates
-
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா?
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு புரமோசன், சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர் 28 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதனால் உங்கள் வேலையை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், இந்த வாரம் அதற்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை ரொமான்டிக்காக இருக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வருமானத்தில் உயர்வு எற்படும். வணிகர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூப்பராக இருக்கும். உங்களின் பெரிய பிரச்சனைகள் தீரும். மனநிலை நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் புத்திசாலித்தனமாக எந்த முடிவுகளையும் எடுப்பீர்கள். நிதி நிலை மேம்படும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலைப்பளு அதிகரிப்பதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பல தவறான எண்ணங்கள் மனதில் எழும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த வேலையையும் திட்டமிட்டு முடிக்க முயற்சித்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்களின் முக்கியமான வேலையில் இடையூறு ஏற்பட்டு, அதன் விளைவாக பண இழப்பை சந்திக்க நேரிடும். இந்த வாரமானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும். நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்காது. புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் எதிர்கால திட்டங்கள் தடைபடலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் எதற்கெடுத்தாலும் எரிச்சலடையக்கூடும். உங்களின் கோபமும், அவரசமும் விஷயங்களை மோசமாக்கும். தேவையில்லாத நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் சிரமப்பட நேரிடும். முக்கியமாக வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications