Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷடமாகவும், இந்த 3 ராசிக்கு சவாலானதாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 நவம்பர் 19 ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 25 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். தொழிலதிபர்களின் நிதி நிலையும் வலுப்பெறும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் இனிமையானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் மற்றும் அவரிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். சில முக்கியமான பண பரிவர்த்தனைகளை செய்வீர்கள். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான மற்றும் கடினமான முடிவுகளை மிக எளிதாக எடுப்பீர்கள். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த வாரத்தில் உங்களின் தினசரி பழக்கங்களில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு வேலையைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களின் வழியில் உள்ள தடைகள் நீங்கும். உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மிகவும் ஆற்றல் நிறைந்து இருப்பீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையாக இருக்கும். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்களின் திட்டங்கள் தடைபடலாம். வார இறுதியில், உங்களுடைய சில வேலைகள் திடீரென்று கெட்டுப்போக வாய்ப்புள்ளது. சிலர் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். நல்ல எண்ணங்களுடன் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் சில குழப்பங்களை சந்திக்கலாம். உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் கடுமை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் உங்களுக்கு மோதல்கள் ஏற்படலாம். பண விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். கடன் வாங்க திட்டமிட்டால், தேவைக்கு அதிகமாக பணம் வாங்குவது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். வார இறுதியில், நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் பட்ஜெட் சமநிலையற்றதாக இருக்க வலுவான வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சவாலானதாக இருக்கும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, உங்கள் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையான செலவுகளை மட்டும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அனைவரிடமும் நன்கு நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற கோபம் மற்றும் ஈகோ உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விலக்கிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications