Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 மே 19 ஆம் தேதி முதல் 2024 மே 25 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
விருச்சிகம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் வேலைகளில் சிறப்பாக கவனம் செலுத்தி, அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் கனவு நனவாகும். உறவுகளைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். உங்களின் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் நிதி நிலை வலுவடையும். புதிய வேலைகளை தொடங்க நினைத்து, அதில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் இந்த வாரத்தில் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உங்கள் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு பலனைப் பெறுவீர்கள். கடன் வாங்கியிருந்தால், அதை இந்த வாரத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டில் சண்டைகள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை விரைவில் முடித்து தருமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் அதிகமாக இருக்கும். வணிகர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும. தந்தையின் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் அது முடிவுக்கு வராது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். கவனமாக சிந்தித்து உத்திகளை உருவாக்க வேண்டும். காதல் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். இந்த வாரம் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். வணிகர்கள் எந்த ஒரு சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் மீள முடியாத அளவில் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications