Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Weekly Lucky And Unlucky Zodiac Signs: கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். இந்த வாரத்தில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். இந்த வாரத்தில் பண பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் கணிசமான உயர்வு ஏற்படும். ஆனால், ஆரோக்கிய விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கடின உழைப்பிற்கான பலனை இந்த வாரத்தில் பெறுவீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனக்கவலை நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கைத்துணையிடம் பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இந்த வாரத்தில் இப்பிரச்சனைகள் நீங்கி, இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்த வாழ்க்கைத் துணையைப் பெறலாம். வார இறுதியில் ஒரு பெரிய நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் பல இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள். சிறு விஷயங்களுக்காகவும் அதிகமாக கோபப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களுடன் சண்டைகளைப் போடலாம். பணியிடத்தில் உங்கள் நடத்தையால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முக்கியமாக வேலையில் கவனக்குறைவால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நீங்கள் மற்றவர்களை எளிதில் நம்பும் பழக்கத்தால் பல சிக்கல்களை சந்திப்பீர்கள். எனவே மற்றவர்களை எளிதில் நம்புவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் திட்டங்களை மற்றவங்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்தால், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருப்பீர்கள். எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தினசரி செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications