Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 மார்ச் 17 ஆம் தேதி முதல் 2024 மார்ச் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் லட்சுமி தேவியின் அருளால் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த வாரத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டு பெரியவர்களின் ஆதரவு இந்த வாரத்தில் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் உங்களின் அனைத்து வேலைகளையும் தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பாலும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அனைத்து வேலைகளும் பிரச்சனைகளின்றி முடிவடயும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். இந்த வாரத்தில் நிதி நிலை வலுவடையும். கடன்களையும் அடைப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். இருப்பினும், உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க அன்றாட வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பாக எந்த ஒரு முடிவுகளையும் அவசரமாக எடுக்காதீர்கள். குறிப்பாக தொழிலதிபர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்தை உணர்வீர்கள். உங்களின் எந்த வேலைகளும் முழுமையடையாமல் போகும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். பணம் தொடர்பாக வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை ஏற்படலாம். இந்நிலையில் கவனமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் உடனே கிடைக்காவிட்டாலும், உங்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள். கடின உழைப்பை தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால், இருவருக்கு இடையே பிரச்சனைகள் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோரின் தவறான நடத்தை உங்களை தொந்தரவு செய்யலாம். இந்நிலையில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்காது. பண விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் மோசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications