Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது... உங்களுக்கு எப்படி?
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களின் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் சில நேர்மறையான மாற்றங்களை காணலாம். வேலைப்பளு குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்காக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்விர்கள். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் கவனக்குறைவுடன் இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கும். அதுவும் இந்த வாரத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பலனைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். வியாபாரிகளின் வருமானம் உயரும். இந்த வாரத்தில் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். மொத்தத்தில் இந்த வாரத்தில் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் நுழைவார்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சில புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். நிறைய அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் புதிய வேலையைத் தொடங்கினால், பல தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். இந்த வாரத்தில் மனதளவில் நன்கு உணரமாட்டீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் நிதி ரீதியாக மிகவும் கடினமாக இருக்கும். பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். கவனக்குறைவால் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், முக்கியமான வேலைகள் பாழாகலாம். காதல் வாழ்க்கை சற்று அழுத்தமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சற்று கசப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது வேலையைப் பொறுத்தவரை மிகவும் பிஸியாக இருக்கும். திட்டமிட்டு வேலை செய்தால், வேலையை முடிக்க முடியும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நிறைய செலவை சந்திக்க நேரிடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பின்பு மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications