Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. இல்ல பண இழப்பை சந்திக்க நேரிடும்..
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர் 21 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கடின உழைப்பிற்கான நற்பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். நிதி பிரச்சனைகள் முடிக்கு வரும். உடல் ஆரோக்கியம் இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி மனதளவில் வலுவாக இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். வெளியூர் சென்று வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த வாரத்தில் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். அதே சமயம் உங்களுக்காகவும் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையை சந்தித்து வந்தால், இந்த வாரத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவை இந்த வாரத்தில் கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். இந்த வாரத்தில் மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் கோபமும், எரிச்சலும் அதிகம் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை சந்திக்கக்கூடும். சிலருக்கு நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக பண இழப்பு ஏற்படலாம். மனதளவில் அதிக சிரமப்படுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மற்றவர்களின் வேலையில் தலையிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்க வேண்டுமானால், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தை மனதில் வைத்து செலவழிக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகள் சற்று சிரமங்களை சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். நீதிமன்ற வழக்குகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடக்க முயற்சிக்க வேண்டும் மற்றும் அவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான சிறுசிறு பிரச்சனைகள் வந்து தொல்லைக் கொடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications