Latest Updates
-
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 2024 ஏப்ரல் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அதோடு சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களின் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் ரொமாண்டிக்காக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதற்காக அதிகமாக செலவு செய்திட வேண்டாம். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வருமானத்தைப் பெறக்கூடும். வசதிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களின் நிதி நிலை வலுபெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை சவாலாக இருக்கும். இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். எந்தவிதமான மாற்றத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். திடீரென்று செலவு அதிகரிப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும. ஆரோக்கிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்தால் பெரிய மருத்துவ செலவை வைத்துவிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் குடும்பம் தொடர்பாக எந்த முடிவுகளை எடுக்கும் போதும் அவசரப்பட வேண்டாம். பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் இந்த வாரத்தில் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்க குறுக்கு வழிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அதுவே பெரிய பிரச்சனையை கொண்டு வந்துவிடும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நிதி இழப்பு ஏற்படலாம். வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்களின் கவனக்குறைவு குடும்ப உறுப்பினர்களின் மனதை புண்படுத்தலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் தினமும் நல்ல உணவுகளுடன், உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications