Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷடமாகவும், இந்த 3 ராசிக்கு பிரச்சனை நிறைந்ததாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 நவம்பர் 12 ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 18 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரத்தில் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் பணம் தொடர்பான கவலைகள் நீங்கும்.
சிலர் புதிய வருமானத்தைப் பெறக்கூடும். மேலும் சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரத்தில் புதிய வேலைகளைத் தொடங்கினால், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உங்களின் முக்கியமான வேலைகள் வேகமாக முடிவடையும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாயப்புக்களைப் பெறுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், இந்த வாரத்தில் அது தீர்க்கப்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.
இந்த வாரத்தில், செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் அவற்றை உங்கள் அறிவுத்திறனால் சிறப்பாக கையாள்வீர்கள். வேலையைப் பொறுத்தவரை பரபரப்பான வாரமாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உங்கள் நடத்தையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். சிறு விஷயங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்வதால், உங்கள் மகிழ்ச்சி பாழாகும். இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தால் நன்றாக இருக்கும். வேலையால் பல அலைச்சலை சந்திக்க நேரிடும். உங்கள் மீது அதிக கவனம் செலுத்த முடியாது. இந்த வாரத்தில் நீங்கள் அலட்சியமாக இருந்தால், ஆரோக்கியம் மோசமடைந்துவிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். மேலும் நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் முக்கியத்துவத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் அன்புக்குரியவர்களிடம் கோபத்தையும், ஈகோவையும் கைவிடுங்கள். பெரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். இம்மாதியான சூழ்நிலையில் உங்களின் பல திட்டங்கள் பாழாகலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும்.
பல திட்டங்கள் தடைபடும். எதிரிகள் இந்த வாரத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்களின் வேலைகளை கெடுக்க முயற்சிப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளால் உங்களின் வேலை பாதிக்கப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications