Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு கொஞ்சம் மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் இனிமையாக இருக்கும். சிலர் குறுகிய பயணத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். இதனால் உங்களின் வேலைகள் அனைத்தும் இந்த வாரத்தில் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண விரும்பினால், அதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதளவில் நன்றாக இருப்பீர்கள். வார இறுதியில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெற வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மிகப்பெரிய பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சவால்களை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சிலர் பண பிரச்சனைகளால் மனதளவில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்து இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் ஒருவித குழப்பத்துடனேயே இருப்பார்கள். முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். வியாபாரிகள் மோசமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் சற்று கடினமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வேலையில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருக்கும். அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். செலவுகள் திடீரென்று அதிகரிப்பதால், நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் கவலை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சில பிரச்சனைகள் இருக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கோபமான இயல்பு உங்கள் உறவுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த வாரத்தில் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications