இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு கொஞ்சம் மோசமாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 மார்ச் 10 ஆம் தேதி முதல் 2024 மார்ச் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 10 March - 16 March 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் வாங்கியிருந்தால், அதை இந்த வாரத்தில் அடைப்பீர்கள். மனதளவில் நன்றாக உணர்வீர்கள். இந்த வாரத்தில் எந்த முடிவுகளையும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இந்த வாரத்தில் உங்கள் முடிவுகளை சிந்தித்து எடுத்தால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த சண்டைகள் முடிவுக்கு வந்து, உறவுகள் வலுவடையும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், வேலையிலும் சிறப்பாக செயல்பட முடியும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். வேலையைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் விரும்பிய வேலை கிடைக்கும். புதிய வருமானத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் பணப் பிரச்சனைகள் நீங்கும்.

இந்த வாரத்தின் துரதிரஷ்ட ராசிகள்...

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்த வணிகர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்ய நினைத்தால், அதை இந்த வாரத்தில் செய்ய முடியாது. வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு மோசமடையும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இது குழந்தைகளையும் பாதிக்கும். நிதி நிலையை வலுப்படுத்த வேண்டுமானால், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் மன அழுத்தத்தால் ஆரோக்கியம் மோசமடையலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் மோசமான நடத்தைகளால் விமர்சனங்களை சந்திக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் நடத்தையை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த வாரத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலும் உயர் அதிகாரிகளுடன் மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் எந்த முதலீடுகளையும் செய்யாதீர்கள். உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, March 11, 2024, 9:57 [IST]
Desktop Bottom Promotion