Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்பவும் மோசமா இருக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், முன்னேற்றத்தைக் காணக்கூடும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள பணம் இந்த வாரத்தில் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். நிதி ரீதியாக இந்த வாரத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் முக்கியமானதாக இருக்கும். ஒரு காரியத்தை முடிப்பதற்காக நீண்ட நாட்களாக கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால் வெற்றியை பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். இந்த வாரத்தில் உங்களின் முக்கியமான பிரச்சனை தீர்க்கப்படும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு முடிவை இந்த வாரத்தில் எடுப்பதாக இருந்தாலும், கவனமாக சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குவார்கள். வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சிறு வெற்றியையும் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்களின் கவனக்குறைவு முன்னேற்றத்தைத் தடுக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் மிகவும் சோர்வுடன் இருப்பார்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை பேண முயற்சிப்பது நல்லது. சிறு விஷயங்களுக்கும் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே உங்கள் உறவைக் கெடுத்துவிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications