Latest Updates
-
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்க போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஜூன் 09 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வீட்டின் சூழல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். பண விஷயத்தில் இந்த வாரம் நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் புகழ்பெற்ற நபர்களின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் வணிகத்தில் பெரிய மாற்றத்தைக் காணலாம். நிதி நிலை வலுவாகும். வசதிகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், இந்த வாரத்தில் அதற்கான அனுமதி வீட்டில் கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் மிகுந்த சோர்வை உணர்வீர்கள். உங்களின் கவனக்குறைவு பிரச்சனைகளை அதிகரிக்கும். நிதி நிலையில் சரிவை சந்திக்க நேரிடும். கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும். முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை அளித்து முடிக்க முயற்சிப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்த வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்காது. இந்த வாரத்தில் நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவும் இந்த வாரம் சாதகமானது அல்ல. பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் பிஸியாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். இந்நிலையில் சற்று பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிக செலவு காரணமாக உங்கள் பட்ஜெட் பாழாகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்காது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரத்தில் பெரிய செலவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் வரவு மற்றும் செலவுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். தேவையற்ற பிரச்சனைகள் உறவுகளை மோசமாக பாதிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications