Latest Updates
-
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2023 அக்டோபர் 08 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர்14 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். பணம் தொடர்பான பிரச்சனைகள் இந்த வாரத்தில் நீங்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குழந்தைகளின படிப்புக்காக நிறைய பணத்தை செலவழிக்கக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வழக்கத்தை விட இந்த வாரத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவிர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி இதுவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் மிகவும் அற்புதமாக இருக்கும். ஆரம்பத்திலேயே பல வெற்றிகளைக் காண்பீர்கள். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இந்த வாரத்தில் புதிய வேலையைத் தொடங்குவீர்கள் மற்றும் அந்த வேலையும் வெற்றிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நிதி ரீதியாக இந்த வாரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீணாக செலவழிக்காதீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் திட்டமிட்டு வேலைகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று பரபரப்பாக இருக்கும். அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். இதனால் மிகுந்த உடல் சோர்வை உணர்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் தவறான நடத்தை உங்கள் அன்புக்குரியவர்களை வருத்தப்பட வைக்கும். கோபத்தாலும், அகங்காரத்தாலும் உங்களைத் தூர விலக்கும் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் வழங்கும் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இந்த வாரத்தில் அதிக மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான அலைச்சலால் ஆரோக்கியம் சற்று மோசமடைய வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications