Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 நவம்பர் 05 ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 11 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடியும். கடினமான வேலைகளை கூட எளிதில் இந்த வாரத்தில் முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும் உங்கள் நடத்தை மட்டும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக பிஸியாக இருப்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடுவதோடு, வருமானத்தில் உயர்வும் ஏற்படும். தொழிலதிபர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இந்த வாரத்தில் சந்திக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி பிரச்சனைகள் இந்த வாரத்தில் முடிவுக்கு வரு. சிலர் திடீரென்று பணத்தைப் பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதல் வாழ்க்கை ரொமான்டிக்காக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. சொத்துக்களை வாங்கும் அல்லது விற்கும் எண்ணம் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும்.
உறவினர்களிடையே இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் அதிக வேலைப்பளு காரணமாக ஆரோக்கியம் மோசமடையக்கூடும். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதிக வேலைப்பளு காரணமாக, மிகுந்த மன அழுத்தத்தை உணர்வீர்கள். உங்களால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். பல முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் போகும்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெற தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இந்த வாரத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, அதிக செலவுகளை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரம் செய்பவர்கள், பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்தை விரிவாக்க கடன் வாங்க விரும்பினால், அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
கூட்டு குடும்பத்தில் இருந்தால், குடும்ப உறுப்பினர்களுடன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான பிரச்சனைகளும் இந்த வாரத்தில் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications