Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு கஷ்டமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2024 பிப்ரவரி 04 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் இந்த வாரத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தால், தொழிலில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இந்த வாரத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்தைக் காணக்கூடும். செலவுகள் குறைந்து நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் முழு ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். வேலையாக இருந்தாலும், சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி பிரச்சனைகள் விரைவில் நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வார இறுதியில் வேலை தொடர்பான செய்திகளைப் பெறக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு பகுதியில் மாற்றங்களை காண்பீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு முடிவுகளை கூட புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே காதல் ஆழமாகும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் எதிர்மறையாக உணர்வீர்கள். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் நிறைந்திருக்கும். பணியிடத்தில் நேர்மறையாக இருப்பதோடு, கடினமாக உழைத்தால், விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வார்த்தைகளால் இந்த வாரத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலையில் பிஸியாக இருப்பதால், இந்த நேரத்தில் உங்களுக்காக போதுமான நேரத்தை செலவிட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடியை தவிர்க்க, பட்ஜெட்டை மனதில் வைத்து செலவழிக்க வேண்டும். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை கூட கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையைப் புறக்கணிக்கும் தவறுகளை செய்யாதீர்கள். இல்லையெனில் உங்கள் உறவுகளில் கசப்பு அதிகரிக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது. நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications