Latest Updates
-
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது?
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 மார்ச் 03 ஆம் தேதி முதல் 2024 மார்ச் 09 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். எல்லா வேலைகளையும் முழு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் முடிப்பீர்கள். அது ஒரு வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளும் திட்டமிட்டபடி முடிப்பீர்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் புதிய வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பழைய கடனை அடைத்து வெற்றி பெறுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களின் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். திருமணம் செய்யாதவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல வரன் கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் மோசமான நடத்தைக்கா விமர்சனங்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் வியாபாரிகள் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக நீங்கள் கூட்டாண்மையில் வணிகம் செய்தால், உங்கள் கூட்டாளருடன் உங்களுக்கு மோதல்கள் ஏற்படலாம். அதிகமாக செலவழிப்பதால், இந்த வாரத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் இந்த வாரத்தில் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். சிறு தவறும் உங்கள் வேலையை இழக்க செய்துவிடும். வணிகர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் பண பற்றாக்குறையால் முக்கியமான வேலைகள் தடைபடும். மனதில் பலவிதமான கவலைகளால் சூழப்பட்டிருப்பீர்கள். மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த வாரத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் உங்களால் கவனத்தை செலுத்த முடியாமல் போகும். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வணிகர்கள் இந்த வாரத்தில் எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பெரிய அளவில் லாபத்தைப் பெற எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கி, நஷ்டத்தை சந்திப்பீர்கள்.



Click it and Unblock the Notifications











