இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஜூன் 02 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 08 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 02 June - 08 June 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. மேலும் வருமானமும் அதிகரிக்கலாம். வியாபாரிகள் எதிர்பார்த்த அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரக்கும். இந்த வாரத்தின் இறுதியில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த வாரத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். வியாபாரிகளுக்கு அற்புதமாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த வாரத்தில் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் இந்த வாரத்தில் சிறப்பான பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளில் அலட்சியமாக இருக்காதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். இந்த வாரம் பட்ஜெட்டிற்கு ஏற்பட செலவு செய்தால் பிரச்சனை ஏதும் இல்லை. இல்லாவிட்டால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் வேலை செய்யும் போது உங்கள் முழு கவனமும் வேலையில் இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். வணிகர்கள் சட்ட விரோதமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். இந்த வாரம் கோபத்தையும் அவசரத்தையும் தவிர்த்தால் நல்லது. ஆரோக்கியம் பலவீனமடையக்கூடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பணியிடத்தில் எதிரிகள் அதிகரிப்பதோடு, உங்கள் இமேஜை கெடுக்க சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். வணிகர்கள் பண விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை வரலாம். இந்த வாரத்தில் எந்த ஒரு விஷயத்தை புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் நிலைமை தீவிரமாகிவிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று மோசமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, June 3, 2024, 9:10 [IST]
Desktop Bottom Promotion