Latest Updates
-
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த வாரத்தின் அதிர்ஷ்ட மற்றும் துரதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2023 அக்டோபர் 01 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர் 07 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
வியாபாரம் செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். இந்த வாரத்தின் பணிபுரிபவர்கள் தங்களின் கடின உழைப்பு ஏற்ற பலனைப் பெறுவார்கள். உறவுகள் வலுவடையும். இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். முக்கியமாக உங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். இந்த வாரத்தில் வேலைகளில் சரியாக கவனத்தை செலுத்த முடியும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, முன்னேற்றத்தையும் காணலாம். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள் மற்றும் அவர்களைப் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் மனக் கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தின் இறுதியில் சொத்துக்களால் சில நற்பலனையும், லாபத்தையும் பெறுவீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உங்களை வீழ்த்த காத்துக் கொண்டிருப்பார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பண விஷயங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்கக்கூடும். கடன் வாங்க நினைத்தால், அதைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது மோசமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மனதளவில் சற்று பலவீனமாக இருப்பார்கள். இந்த வாரத்தில் அதிக உணர்ச்சிவசப்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கக்கூடும். உங்களை நீங்களே தவறாக புரிந்து கொள்வீர்கள். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். அதிக அலைச்சல் மற்றும் மன அழுத்தத்தால், ஆரோக்கியம் மோசமடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் நிதி நெருக்கடியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் இந்த வாரத்தில் சோம்பேறித்தனமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலும் உயர் அதிகாரிகளின் அழுத்தமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications