Weekly Love Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி மேலோங்கும்...

Weekly Love Horoscope: ஒருவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்துமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு நடக்கக்கூடியவை. அதிலும் திருமணம், காதல் என வரும் போது அதில் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பு தான். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, வாராந்திர காதல் ராசிபலனை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.

Weekly Love Horoscope From 27 May To 02 June 2024 In Tamil

இந்த வாரம் மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கம் காரணமாக, 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில், உங்களிடையேயான நம்பிக்கை குறையலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறிய விஷயங்களுக்காக கூட உங்களுக்குள் மோதல்கள் சாத்தியமாகும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தால் நல்லது. பேச்சுவார்த்தை மூலம் உங்களிடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பொதுவாக, இந்த காலகட்டத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு காதலில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் துணையை சந்திக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உறவை முன்னோக்கி நகர்த்த விரும்பினால், அதைப் பற்றி உங்கள் துணையிடம் பேச தொடங்கலாம். வாரத்தின் இரண்டாம் பாதி உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் துணையிடம் இருந்து ஆசச்ரிய பரிசுகளைப் பெறலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை வழங்குவீர்கள். உங்களுக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு காதல் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கிடையே மனகசப்பு அதிகரிக்கும். உங்களுக்கிடையே பரஸ்பர புரிதல் குறையலாம். மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக உங்களுக்குள் சண்டைகள் ஏற்படலாம். நீங்கள் ஒருவரையொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். வார இறுதியில் உங்களுக்கிடையேயான பிரச்சனை குறையும். நீங்கள் படிப்படியாக உங்கள் துணையை முழுமையாக நம்பத் தொடங்குவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் துணையுடன் சில அழகான இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் துணையின் முழு கவனம் உங்கள் மீது தான் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மிகவும் சிறப்பாக உணர்வீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் கலவையானதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் கவனக்குறைவால் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உங்கள் துணையைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். ஏதேனும் சிக்கல் இருந்தால், உங்கள் வாதத்தை அமைதியாகவும், மனம் திறந்தும் முன்வைக்க முயற்சிக்கவும். இது உங்கள் உறவை மேம்படுத்தும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில், உங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்ப்பையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு சற்று மெதுவாகவே செல்லும். வேலையில் பரபரப்பாக இருப்பதால் உங்கள் துணைக்கு அதிக நேரம் கொடுக்க முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் உங்களிடம் சிறிது கோபமாக இருக்கலாம். உங்கள் துணையிடம் திருமணத்திற்கு முன்மொழிவதும் இந்த வாரம் சாத்தியமாகும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கையில் புதிய உறுப்பினர் வருவதற்கான வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் திருமணத்திற்கு முன்மொழியலாம். அதற்கு நேர்மறையான பதிலையும் பெறலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், சுவாரஸ்யமான ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். முதல் பார்வையிலேயே நீங்கள் ஒருவரிடம் காதல் வசப்படலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, சில காரணங்களால் உங்கள் துணையுடன் உங்களுக்யிடையே பிரிவு ஏற்பட்டால், இந்த நேரத்தில் உங்களுக்கிடையே எல்லாம் சாதாரணமாகிவிடும். உங்கள் நடத்தையில் நீங்கள் கொஞ்சம் மென்மை தன்மையைக் கொண்டு வர வேண்டும். மேலும், உங்கள் துணை மீதான நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்கவும். நீங்கள் தனிமையில் இருந்து, ஒருவரிடம் காதலை முன்மொழியப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்க போகிறது. குறிப்பாக நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் திருமணத்திற்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். விரைவில் உங்கள் திருமணம் அரங்கேறலாம். திருமண வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகளால் சில பிரச்சனைகள் வரலாம். அதனால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில், உங்கள் துணையின் தவறான நடத்தை உங்கள் மனதைக் காயப்படுத்தலாம். உணர்வு ரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் துணை உங்களிடம் திருமணத்திற்கு முன்மொழியலாம். இருப்பினும், நீங்கள் குழப்பமான சூழ்நிலையில் இருப்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். எல்லா வகையிலும் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் உறவு மேலும் வலுவடையும். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை கூடுதலாக கவனிப்பார்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆனால் வாரத்தின் நடுப்பகுதியில் நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும். சிறு சிறு விஷயங்களுக்கு உங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைதியாக இருப்பது உங்களிடையே தவறான புரிதலை மேலும் அதிகரிக்கும். பேச்சுவார்த்தை மூலம் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சித்தால் நல்லது. இந்த காலகட்டத்தில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் மறக்கமுடியாத நேரத்தைச் செலவிடுவீர்கள். ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளிலும் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சிறப்பான உணர்வை ஏற்படுத்த நீங்கள் ஏதாவது சிறப்பு செய்ய முயற்சிக்கலாம்.

Desktop Bottom Promotion