Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
Weekly Love Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை கேட்காமல் முடிவெடுப்பதைத் தவிர்க்கணும்..
Weekly Love Horoscope: ஒருவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்துமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு நடக்கக்கூடியவை. அதிலும் திருமணம், காதல் என வரும் போது அதில் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பு தான். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாராந்திர காதல் ராசிபலனை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.
இந்த வாரம் ஜூன் 24 முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கம் காரணமாக, 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். தேவையில்லாமல் உங்கள் துணையை சந்தேகப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உறவு பலவீனமாகிவிடும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் உங்களுக்காக ஒரு நல்ல வரன் தேடி வரலாம். இருப்பினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். நீங்கள் வீண் மோதல்களைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டால், வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். காதல் ஜோடிகளுக்கு இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கிடையில் அன்பும் காதலும் மேலும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை ஆழமாகும். உங்கள் உறவுக்கு நீங்கள் முழு அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். திருமண வாழ்வில் இனிமையான சூழல் இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். எதிர்காலத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்களிடையே பரஸ்பர புரிதல் மேம்படும். அன்றாட வேலைகளை முடிப்பதில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். விரைவில் உங்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் வேலையில் பரபரப்பாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவீர்கள். இது உங்களிடையே புரியதை அதிகரிக்க செய்யும். அதனால், உங்களுக்கிடையேயான காதல் மேலும் ஆழமாகிவிடும். இந்த நேரத்தில் அவர்கள் உங்களைக் கூடுதலாக கவனிப்பார்கள். உங்கள் காதல் துணையுடன் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். பேச்சுவார்த்தை மூலம் உங்களுக்கிடையேயான மனகசப்பைக் குறைக்க முயற்சிக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு, கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையைப் பெற வேண்டும். உங்கள் அன்புக்குரியவரை புறக்கணிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு இந்த வாரம் சற்று கடினமாகவே இருக்கும். உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுவது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கிடையே பரஸ்பர புரிதல் குறையலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறிய விஷயங்களில் கூட பதற்றம் ஏற்படலாம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் காதல் ஜோடிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் ஒப்புதல் பெறலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரம் உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் ஏதாவது சிறப்பாக செய்ய திட்டமிடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தனிமையில் இருப்பவர்கள், வாழ்க்கைத் துணையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு சிறப்பு நபரைச் சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, பழைய பிரச்சனைகளை எல்லாம் மறந்து, இந்த நேரத்தில் உங்கள் உறவை மேம்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். நீங்கள் அதற்கான தகுந்த முடிவுகளைப் பெறவும் வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாவது நபர் அதிகமாக தலையிட அனுமதிக்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்காது. உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். கண்ணியமாக இருந்து, உங்கள் துணையை மரியாதையுடன் நடத்துங்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு சில நல்ல செய்திகளைக் கூறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்களுக்கு காதல் முன்மொழிவும் வரலாம். இருப்பினும், நீங்கள் கவனமாக யோசித்த பதிலளிக்க அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications