Latest Updates
-
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Weekly Love Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிதே தொடங்க வாய்ப்புள்ளது...
Weekly Love Horoscope: ஒருவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்துமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு நடக்கக்கூடியவை. அதிலும் திருமணம், காதல் என வரும் போது அதில் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பு தான். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாராந்திர காதல் ராசிபலனை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.

இந்த வாரம் ஜூன் 10 முதல் ஜூன் 16ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கம் காரணமாக, 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் காதல் துணைக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முடியும். அதனால், உங்களிடையே நெருக்கம் கூடும். உங்கள் துணையிடமிருந்து ஆச்சரியமான பரிசும் கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் உங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், விரைவில் அனைத்து மனக்குறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, பேச்சுவார்த்தை மூலம் உங்கள் உறவை மேம்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். அதில், வெற்றியையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் உறவில் புதுமையை உணர்வீர்கள். உங்கள் துணைக்கு ஒரு நல்ல ஆச்சரியத்தைக் கொடுக்க நீங்கள் நன்றாக திட்டமிடலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் உணருவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒருவரையொருவர் மீண்டும் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். பிறர் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்கள் உறவு தொடர்பான சில முக்கிய முடிவுகளையும் நீங்கள் எடுக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் காதல் செய்ய நிறைய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்கள் துணையை பெரிதும் கவரும். நீங்கள் அவர்களிடம் திருமணத்திற்கு முன்மொழிய விரும்பினால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் காதல் ஜோடிகளுக்கு கலவையான பலன்களைத் தரும். வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வார இறுதியில் உங்களுக்கு இடையே தவறான புரிதல்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மனதில் அமைதியின்மையை உணருவீர்கள். நீங்கள் உங்கள் துணையைப் புரிந்துகொண்டு உங்கள் உறவில் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருந்தால் நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் வசீகரமான ஆளுமையால் ஒருவர் ஈர்க்கப்படுவார். உங்கள் காதல் வாழ்க்கை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் உறவு மேலும் வலுவடையும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை அறிவார்கள். உங்கள் உறவை மேம்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கிடையே பரஸ்பர புரிதல் குறையும். அதனால், சிறிய விஷயங்களுக்காக உங்களுக்குள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். இந்த நேரத்தில், உங்கள் முடிவுகளை அமைதியான மனதுடன் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட வேண்டாம். வார இறுதியில், உங்கள் உறவில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கடந்த காலத்தை மறந்துவிட்டு புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சித்தால் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் தேடல் முடிவடையும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஏற்கனவே காதலித்து கொண்டிருந்தால், உங்கள் துணையின் கரம் பிடித்து மணம் புரிந்த கொள்ள முயற்சிக்க வேண்டும். நீங்கள் நேர்மறையான பதில்களைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட முயற்சியுங்கள். இது உங்களுக்கு இடையேயான பாசத்தை அதிகரிப்பதோடு, உங்கள் உறவு மேலும் வலுவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில், உங்கள் துணை மிகவும் காதல் மனநிலையில் இருப்பார். மேலும், உங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு நடைப்பயிற்சியும் செல்லலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் உங்கள் உறவை முன்னோக்கி கொண்டு செல்லவும் நீங்கள் முடிவு செய்யலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் கோபம் மற்றும் ஈகோவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், உங்களுக்கிடையே பிரிவு சாத்தியமாகும். தேவையில்லாத விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இதைத் தவிர, மற்றவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் உறவு தொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பையும் உற்சாகத்தையும் தக்க வைத்துக் கொள்ள, உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற விரும்பினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேச இது சாதகமான நேரம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் தனிமையில் இருந்தால், உங்களுக்கு காதல் முன்மொழிவு வரலாம். இருப்பினும், நீங்கள் அவசரப்பட வேண்டாம். நன்றாக யோசித்து பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு சற்று கடினமானதாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். நீங்கள் மிகவும் அமைதியற்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்களுக்கிடையேயான கசப்பை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தால் நல்லது. வார இறுதியில் ஓரளவு முன்னேற்றம் காணலாம். இந்தக் காலத்தில் எந்த வேலையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள்.



Click it and Unblock the Notifications