வார ராசிபலன் (30 April to 06 May 2023) - இந்த வாரம் இந்த ராசிக்கார்களுக்கு வேலைப்பளு அதிகமா இருக்கும்...

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஏப்ரல் 30 முதல் 2023 மே 06 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 30 April 2023 To 06 May 2023 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களின் விருப்பம் நிறைவேறும். நிதி பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். நிதி ரீதியாக இக்காலம் கலவையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் உதவியால், பெரிய பிரச்சனை தீர்க்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: புதன்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதுவரை உங்கள் துணையுடன் பிரச்சனையை சந்தித்தால், இந்த வாரத்தில் அந்த பிரச்சனை குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலையை வலுப்படுத்த புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். குறைவான முயற்சியில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் குறித்து தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள், இந்த வாரம் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மந்தமாகவே இருக்கும். உங்களின் சில வேலைகளில் தடைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் அதிக வேலை அழுத்தத்தை தங்களுக்குள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு கடினமாக இருக்கும். திடீர் வேலைப்பளுவால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் மிகுந்த சோர்வை உணர்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். பட்ஜெட் போட்டு செலவழித்தால், நிறைய பணத்தை சேமிக்க முடியும். சிறு விஷயங்களுக்காக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் குழந்தைகளிடமும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பைப் பெறலாம். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காணலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வார இறுதியில் வேலை தொடர்பான பயணம் செய்ய நேரிடும். திருமணமாகாதவராக இருந்தால், இந்த வாரம் விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெறலாம். இந்த வாரத்தில் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தினமும் காலை உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையை கட்டுப்படுத்த வேண்டும். இந்த வாரம் உங்கள் வீட்டின் சூழல் சரியாக இல்லாமல் இருக்கலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். முக்கியமான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படலாம். வணிகர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக எந்த வேலைகளையும் செய்ய வேண்டாம். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டு பிரச்சனைகளால் ஒருவித குழப்பத்துடன் இருப்பீர்கள். எந்த முக்கியமான முடிவை எடுக்கும் முன்பும் நன்கு கவனமாக சிந்திக்க வேண்டும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரத்தையும் பெறுவீர்கள். வார இறுதியில், வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்று கவலை அளிக்கும். அதே சமயம் உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமணமானவர்களுக்கு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் கடினமாக உழைப்பார்கள். வார இறுதியில் முன்னேற்றத்திற்கான நல்ல லாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்கள் மன அழுத்தம் குறையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் சிறுசிறு விஷயங்களுக்காக மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உங்கள் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்கள் இலக்கிலிருந்து உங்களைத் திசைதிருப்ப முயற்சி செய்வார்கள். எனவே நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். ஆரோக்கியமாக இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களால் உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படலாம். அதிக வேலை அழுத்தம் காரணமாக, உங்களுக்காக போதுமான நேரத்தை பெற முடியாது. உங்கள் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்கள், இந்த வாரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு விரும்பிய லாபம் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருந்தாலும், பெரிய பிரச்சனை இருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வேலையில்லாமல் இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். கடந்த கால முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிக்கிய பணத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

Story first published: Sunday, April 30, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion