வார ராசிபலன் (28 January To 03 February 2024) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கும்...

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஜனவரி 28 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 03 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 28 January 2024 To 03 February 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பல விஷயங்களில் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளுடனான உங்கள் ஒருங்கிணைப்பும் மேம்படும். வணிகர்கள் புதிய யுக்திகளால் வெற்றி பெறுவார்கள். பணத்தைப் பொறுத்தவரை, வாரத்தின் ஆரம்ப நாட்களில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் அதற்குப் பிறகு சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில், வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் இந்த வாரம் நல்ல லாபத்தைப் பெறலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருடனான உங்கள் உறவு வலுவடையும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, இந்த வாரத்தில் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் சற்று மெதுவாக இருந்தாலும், போக போக மிகவும் அருமையாக இருக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் வாரத்தின் நடுப்பகுதியில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் பெரிய நிம்மதி கிடைக்கும். உங்கள் சம்பளம் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்தால், இந்த வாரம் உங்கள் பிரச்சனை தீரும். திருமண வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் வாக்குவாதங்கள் வரலாம். நிதி ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சில பழைய நோயிலிருந்து விடுபடலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு சற்று சவாலானதாக இருக்கும். கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எல்லா வேலைகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இது தவிர சக ஊழியர்களை அதிகமாக நம்பாமல் இருந்தால் நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சில கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு இனிமையாக இருக்கும். உங்கள் மூதாதையர் சொத்தில் ஏதேனும் ஒன்றை நீங்கள் விற்க விரும்பினால், உங்கள் நெருங்கியவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். வேலை விஷயமாக இந்த வாரம் உங்களுக்கு சற்று பிஸியாக இருக்கும். பொறுப்புகளின் சுமை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் உங்கள் எல்லா வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார இறுதியில் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஆன்லைனில் வியாபாரம் செய்தால் விரும்பிய லாபத்தைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் குறையும். உறவுகளை மேம்படுத்த கடுமையாக முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் எந்த ஒரு முக்கிய வேலையையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வணிகத்துடன் தொடர்புடையவர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டம் முன்னேறும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் புதிய வருமானத்தைப் பெறலாம். பழைய குடும்பக் கடனை நீக்குவதில் வெற்றி பெறுவீர்கள். தாம்பத்திய வாழ்வில் பதற்றம் அதிகரித்து வருவதைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிக செலவுகள சந்திக்க நேரிடும். இருப்பினும் பண வரவு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் இருந்து மனதை இழக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்மறை உணர்வையும் உணருவீர்கள். வேலையில் இருப்பவர்கள் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு சிறிய கவனக்குறைவு செய்தால், அது உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கூட்டு தொழில் செய்பவர்கள், கூட்டாளருடன் பிரச்சனையை சந்திக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். சில காரணங்களால் நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருந்தால், இந்த நேரத்தில் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் ஆசை நிறைவேறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் முதலீடு செய்தால், சரியான பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, நீங்கள் அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சராசரியாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குறிப்பாக உங்கள் பெற்றோர் உங்களை நினைத்து பெருமைப்படுவார்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்களுக்கு திருமண வரன் தேடி வரலாம். விரைவில் நீங்கள் விரும்பிய வாழ்க்கை துணையை பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் எந்த விதமான மாற்றத்தையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், அனுபவம் வாய்ந்த மற்றும் நெருங்கிய நபரிடம் கலந்தாலோசித்த பிறகே அத்தகைய முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். பண விஷயத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் பல குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் நல்லது. நிதிக் கண்ணோட்டத்தில், இந்த வாரம் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். நிலுவையில் உள்ள பணம் வராததால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வார இறுதியில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை கொடுப்பீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணையை சந்திக்க பல வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் வணிகர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூட்டாண்மையுடன் ஒரு தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் சம்பளம் உயரும் வாய்ப்பும் அதிகம். வாரத்தின் நடுப்பகுதியில் திடீரென்று வேலை சம்பந்தமான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இருப்பினும், சிந்திக்காமல் செலவு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக ஆடம்பரத்திற்காக அதிக பணம் செலவு செய்வது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் கடின உழைப்புக்கான வெற்றியைப் பெறுவீர்கள். வார இறுதியில் உங்களுக்கு நிதிப் பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் உறவு ஆழமாகும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் சில டென்ஷன் இருக்கும். துணையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். தேவையில்லாமல் சந்தேகம் கொள்ளும் உங்கள் பழக்கம் உங்களுக்கிடையே உள்ள தூரத்தை அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில், பணம் தொடர்பான சில முக்கிய வேலைகளையும் செய்யலாம். இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

Story first published: Sunday, January 28, 2024, 6:40 [IST]
Desktop Bottom Promotion