Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
வார ராசிபலன் (28 April To 04 May 2024) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட போகுது...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் 2024 மே 04 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருககும். வணிகர்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்கை அடைவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். பணம் சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் குடும்பத்தினரின் ஒப்புதல் கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால், இந்த வாரத்தில் நல்ல செய்தியைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். வேலை தொடர்பான பிரச்சனைகள் இந்த வாரத்தில் தீரும். ஆனால் முதலீடுகளை செய்வதில் அவசரப்பட வேண்டாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்வோர் உங்கள் இமேஜை கெடுக்க முயற்சிக்கலாம். பண விஷயத்தில் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்துவதில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். திருமணமாகாதவராக இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கை துணையை சந்திப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். வாரஇறுதியில் திடீரென்று வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் செலவுகளும், உடல் சோர்வும் அதிகரிக்கும். வேலையுடன் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். உடன் வேலை செய்வோரை அதிகம் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றமடைவீர்கள். இந்த வாரத்தில் மற்றவர்களை அதிகமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி பலன் கிடைக்கும். வெளிநாட்டில் தொழிலை விரிவுபடுத்த நினைத்தால் உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும், ஆனால் செலவுகளை அதிகரிப்பது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரும அழற்சியால் அவதிப்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். இந்த வாரத்தில் முழு நம்பிக்கையுடன் உங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலதிபராக இருந்தால், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்களின் சிறப்பான செயல்திறனால் தங்கள் வேலையில் வெற்றியைக் காண்பார்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில் உங்கள் நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கிய விஷத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. காதல் வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணர்ச்சி ரீதியாக, இந்த வாரத்தில் உங்கள் துணை மிகவும் பலவீனமாக உணருவார். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுத்திருந்தால், அதை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இது தவிர, வார இறுதியில் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்பையும் பெறலாம். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் பலத்தால், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் ஈகோ போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் பிடிவாத குணம் உங்கள் பிரச்சினைகளை அதிகரிக்கும். கோபத்திற்கு பதிலாக அன்புடன் அவர்களிடம் விளக்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர் வேலைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்கள் திட்டம் வெற்றிகரமாக இருக்கும். பணப் பிரச்சனைகளைத் தவிர்க்க, முழு வாரத்திற்கான பட்ஜெட்டை முன்கூட்டியே தயார் செய்தால் நல்லது. இந்த வாரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பரம்பரை தொழிலில் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் அன்புக்குரியவர்களின் உதவியால் நல்ல பலன்களைப் பெறலாம். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றத்தையும் காண்பீர்கள். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இந்த வாரம் உங்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் அவசரத்திலும் பீதியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக எதையும் கையாள வேண்டும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் ஒருங்கிணைப்பும் மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், இந்த வாரத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக கலவையாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். அதே சமயம் தொடர்ச்சியான செலவுகள் காரணமாக பணத்தை சேமிக்க முடியாமல் கவலைப்படுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இருப்பினும், நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, நீங்கள் அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் நிதி நிலை உயரும். பணப்பற்றாக்குறையால் நின்று போன வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications