வார ராசிபலன் (26 May 2024 To 01 June 2024) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கடன் கொடுப்பதை தவிர்க்கணும்...

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 மே 26 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 01 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 26 May 2024 To 01 June 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் திட்டங்களில் தடைகளை சந்திக்க கூடும். வேலையுடன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. நிதி ரீதியாக இந்த வாரத்தில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் பண பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பணி புரிபவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் செயல்திறனில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த சூழ்நிலையில் உங்களை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அது உங்கள் வேலையை பாதிக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் ஓரளவு நன்றாக இருக்கும். சட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரம் உங்களின் சந்தேக புத்தி உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காதல் விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சர்ச்சைக்குரியதாக இருக்கும். மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக உங்களுக்கிடைய தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த வாரம் சுமாராக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆலோசனையை பெற அறிவுறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல வரன் தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபத்தை தரும் புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். இந்த வாரம் உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது. இல்லையெனில் உங்கள் பேச்சே பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். பணிபுரிபவர்கள் தங்கள் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் வேலை சுமை அதிகரிக்கலாம். இதன் காரணமாக அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். வருமானம் உயரும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் நன்றாக உணர்வீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்மறையான முடிவுகளை பெறுவீர்கள். தாயின் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரிகள் திடீரென்று நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். பழைய கடனை திருப்பி செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உண்ணும் உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தேவையற்ற விஷயங்களை பற்றி சிந்தித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பை பெறலாம். அத்தகைய சூழ்நிலையில் உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்யுங்கள். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ அவ்வளவு பெரிய வெற்றியை பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வருமானம் உயரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். இருப்பினும் அந்த முடிவுகளால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை தொடர்பான வேலை செய்பவர்கள் நல்ல பலனை பெறலாம். தேவையில்லாமல் கோபப்படும் உங்கள் பழக்கம் உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடம் இருந்து பிரித்துவிடலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதை அனைவரிடமும் கூறுவதை தவிர்க்க வேண்டும். வேலையாக இருந்தாலும் சரி அல்லது வணிகமாக இருந்தாலும் சரி, எவ்விதமான மாற்றத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் மற்றவர்களை அதிகம் நம்புவதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். இந்தப் பயணம் உங்கள் நேரத்தை வீணடிப்பதோடு பண இழப்பையும் ஏற்படுத்தலாம். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பது நல்லது. மனக்கசப்பை வளர்க்க விடாதீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள். தொழில் வேகமாக முன்னேறும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் முன்னேற்றத்தையும் வருமான உயர்வையும் காணலாம். வியாபாரிகள் இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்களுக்கு எதிராக அவர்கள் சதி செய்யலாம். உங்களின் சில முக்கியமான வேலைகளில் இடையூறை ஏற்படுத்தலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்கும் இருப்பினும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்த்து அறிவுறுத்தப்படுகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால் பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்களோ அந்த அளவுக்கு உறவு வலுபெறும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த வாரம் சுமாராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பணத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் கவலைகள் நீங்கும். வாரத்தின் நடுப்பகுதியில் வாழ்க்கைத் துணையுடன் குறுகிய பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அனைத்து வேலைகளும் சமூகமாக முடிவடையும். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அது உங்கள் வேலையில் நன்கு தெரியும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உறவுகளை பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். கோபத்தையும் ஈகோவையும் கைவிட வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும் உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை பிரச்சனை எதுவும் இருக்காது.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். வேலையை மாற்ற நினைத்தால் புதிய வேலையை தேடுவதற்கு இந்த வாரம் சிறந்ததாக இருக்கும். வியாபாரிகள் சில நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் வீட்டு செலவுகள் அதிகரிக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். வார இறுதியில் உங்கள் ஆரோக்கியம் மோசமடையலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். காதலை பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணம் தொடர்பான கவலைகளிலிருந்து விடுபடலாம். சிலர் புதிய வருமானத்தை பெறலாம். சொத்து சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை கிடைக்கும். உங்கள் முன்னேற்ற கனவு நினைவாகும். அரசு வேலை செய்ய விரும்பினால் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் தங்கள் நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடாதீர்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். வேலையில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், அதன் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிக்கும். வியாபாரிகள் கலவையான பலன்களை பெறுவார்கள். கூட்டு வணிகம் செய்தால் கூட்டாளர்களுடன் மோதல்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது வாழ்க்கை துணையுடன் அன்பும் பாசமும் அதிகரிக்கும். திருமணமாகாதவராக இருந்தால் நல்ல திருமண வரன் கிடைக்கும். இருப்பினும் நீங்கள் அவசரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் பட்ஜெட்டை தாண்டி செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோககியமும் சற்று பலவீனமாகவே இருக்கும்.

Story first published: Sunday, May 26, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion