வார ராசிபலன் (25 June to 01 July 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்துல கவனமா இருக்கணும்..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஜூன் 25 முதல் 2023 ஜூலை 01 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 25 June 2023 To 01 July 2023 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். பண விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். புத்திசாலித்தனமாக செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: புதன்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் சில நற்செய்திகளை பெறலாம். உங்கள் வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். இந்த வாரம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, முயற்சித்தும் வெற்றி கிடைக்காவிட்டால் பொறுமையாக இருங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆயினும் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையால் இந்த வாரம் சிரமங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சற்று மெதுவாகவே இருக்கும். ஆனால் போக போக நன்றாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, மிகவும் பிஸியாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பான அனைத்து திட்டங்களையும் முன்கூட்டியே செய்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியம் மோசமாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தைப் பார்ப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: புதன்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். தேவையற்ற கவலைகளால் சூழப்படுவீர்கள். வேலையில் கவனம் செலுத்துவதில் பல சிரமங்களை சந்திப்பீர்கள். வேலை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், நெருக்கமானவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். இந்த வாரத்தில் புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன், கவனமாக சிந்திக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பற்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியரின் உதவியால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் அதிக மன அழுத்தமடையக்கூடும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு இந்த வாரம் கடினமாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் விரிவடையும். நிதி நிலை வலுபெறும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். இந்த வாரம் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் வரலாம். சிறு பிரச்சனைகளை புறக்கணித்துவிடுங்கள். இல்லாவிட்டால், வீட்டின் அமைதி பாதிக்கப்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். திடீரென்று பணம் தேடி வரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்வீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

Story first published: Sunday, June 25, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion