Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
வார ராசிபலன் (21 May to 27 May 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகுது...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 மே 21 முதல் 2023 மே 27 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வீட்டு சூழல் நன்றாக இருக்காது. குடும்ப உறுப்பினரின் திடீர் உடல்நலக் குறைவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வேலையைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருக்கும். தொழிலதிபராக இருந்தால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் மன அழுத்தம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முடிக்கப்படாத பணிகள் முடிவடையும் மற்றும் உங்கள் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையை முழுமையாக கவனிக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் செலவுகள் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு நஷ்டத்தை ஈடுசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் உங்கள் மீது பணிச்சுமை அதிகமாக இருக்கும். ங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, நீங்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். எந்த முக்கியமான முடிவை எடுத்தாலும், உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஏதேனும் ஆன்லைன் படிப்பை செய்ய திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரம். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே பணம் சம்பந்தமான எந்த வேலையையும் அவசரத்தில் செய்யாதீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நிறைய அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: புதன்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும். வாரத்தின் நடுப்பகுதியில், திடீரென்று நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல ஆதாயத்தைத் தரும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குறைந்த முயற்சியில் நல்ல பணத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் கடந்த வாரத்தை விட நன்றாக இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இருப்பினும், பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும். உடல் ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். வேலையை ஒதுக்கிவிட்டு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். இருப்பினும், ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளையும் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருக்கவும். பொறாமை கொண்ட சிலர் இந்த வாரத்தில் உங்கள் இமேஜை கெடுக்க முயற்சி செய்யலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வெளிநாடு செல்ல நினைக்கும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். உங்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். இந்த வாரம் உங்கள் வாழ்க்கை துணையுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: புதன்
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வார இறுதியில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வீட்டிற்காக அதிக பணத்தை செலவழிப்பீர்கள். அதோடு மதிப்புமிக்க பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் நன்றாக இருக்காது. தேவையற்ற கவலைகளால் வருத்தமடைவீர்கள். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால் உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களின் கடின உழைப்புக்கு விரைவில் பலன் கிடைக்கும். வணிகர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். பணப் பற்றாக்குறையால் உங்களின் சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். சில குடும்ப உறுப்பினர்களின் தவறான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யும். உணர்ச்சிரீதியாக பலவீனமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களது தடைப்பட்ட எந்த திட்டத்தையும் மீண்டும் தொடங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். ஒரு பெரிய திட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை



Click it and Unblock the Notifications